ஹேஷ்டேக் Me Too மூலம் வரும் புகார்களை விசாரிக்க தனிக்குழு அமைக்க முடிவு

709

அமெரிக்காவில் பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்தவர்களின் முகத்திரையை கிழிப்பதற்காக பாதிக்கப்பட்ட பிரபலங்கள் நானும் பாதிக்கப்பட்டேன் என்னும் ஹேஷ்டேக் MeToo பெயரில் டுவிட்டர் மூலம் பிரச்சார இயக்கத்தை தொடங்கினர். இதனிடையே இந்திய திரையுலகிலும் இந்த ஹேஷ்டேக் Me Too இயக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பாலிவுட் நாயகி தனுஸ்ரீ தத்தா, பாடகி சின்மயி உள்ளிட்டோர் பரபரப்பு புகார்களை தெரிவித்து வருகின்றனர். வெளியுறவுத்துறை இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் மீதும் பெண் பத்திரிகையாளர்கள் பாலியல் புகார்களை தெரிவித்தனர். இதையடுத்து இவ்விவகாரம் தொடர்பாக மத்திய அரசு அமைதியாக இருப்பது ஏன்? என்றும், எம்.ஜே.அக்பர் விளக்கமளிக்க வேண்டும் அல்லது ராஜினாமா செய்ய வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில், ஹேஷ்டேக் Me too புகார் தொடர்பாக பொது விசாரணை செய்ய 4 ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழு அமைக்கப்படும் என மத்திய மகளிர் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்துள்ளார். இந்த குழுவில் வழக்கறிஞர்கள் மற்றும் சட்டத்துறை வல்லுனர்களும் இடம்பெறுவார்கள் என்றும், ஹேஷ்டேக் MeToo பிரசார இயக்கம் தொடர்பான புகார்களை இந்த குழுவினர் விசாரிப்பார்கள் என மேனகா காந்தி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of