வைரஸ் தொற்று எண்ணிக்கையில் குழப்பம்..! உயிரிழந்த 5 பேர் எங்கே..? நெட்டிசன்கள் அதிர்ச்சி..!

152

வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கையை, தமிழக சுகாதாரத்துறை தினம்தோறும் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், வைரஸ் தொற்றில் பாதிக்கப்பட்டவர்கள், டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்கள், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை இன்றும் வெளியிடப்பட்டது.

இதில் தான் தற்போது ஒரு பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளது. அதாவது, நேற்று (15/09/2020) சென்னையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3004 என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

corona update 1

இன்று வந்த அறிக்கையின் படி, சென்னையில் இன்று ஒரு நாளில் மட்டும் 14 பேர் உயிரிழந்ததாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

corona update 2

எனவே, மொத்தம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, இன்று 3,018 என வந்திருக்க வேண்டும். ஆனால், அதற்கு பதிலாக, 3,013 என எண்ணிக்கை வந்திருக்கிறது.

இதனைப்பார்த்தவர்கள், 5 நபர்களின் எண்ணிக்கை இடிக்கிறதே.. எங்கே அந்த 5 நபர்கள் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். தினம்தோறும் வெளியிடப்படும் இந்த வைரஸ் தொற்று அறிக்கையில், தற்போது  குழப்பம் இருப்பது நெட்டிசன்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of