யானைகள் தினம், யானைகளைப் பற்றி தெரியாத சில விஷயங்கள்…

2435

Moeritherium ஏறத்தாழ 300 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிவிட்ட ஒரு இனம். பல முறை பரிணாம வளர்ச்சி அடைந்து, இன்று உலகத்தில் இன்னும் குறிப்பாக இந்த அகண்ட நிலப்பரப்பில் வாழும் ஒரு மிக பெரிய இனம். அந்த பிரம்மாண்ட உயிரினம் தான் யானைகள். 

ஆப்பிரிக்க சவானா யானைகள், ஆப்பிரிக்க காட்டு யானைகள், ஆசிய யானைகள் என்று மூன்று வித யானைகள் இந்த உலகில் நம்மோடு வசிக்கின்றன. சராசரியாக 9 அடியில் இருந்து சுமார் 15அடி வரை வளரக்கூடிய இந்த பிரமாண்ட உயிரினங்கள் ஏறத்தாழ 7500 கிலோ வரை எடை இருக்கும்.

“யானைக்கும் அடிசறுக்கும் என்பது பழமொழி” ஆனால் உண்மையில் உருவம் பெரிது எனினும் அழிவை நோக்கி நகரும் உயிரினங்கள் பட்டியலில் யானைகளும் உண்டு என்பது மறுக்கமுடியாத உண்மை.. 

தந்தத்திற்காக கொல்லப்படும் யானைகளின் அளவிற்கு நிகராக வயல்வெளியில் மின்சாரம் தாக்கி இறக்கும் யானைகளின் அளவு இருப்பதாக ஒரு ஆய்வு கூறுகிறது. நில ஆக்கிரமிப்பு என்ற பெயரில் யானைகளின் வழித்தடத்தை ஆக்கிரமித்து அவை வாழ்ந்த இடத்தில் நாம் வீடுகட்டி குடியேறிவிட்டு தற்போது அந்த உயிரினங்களை பார்க்கும் இடத்தில் எல்லாம் ஓட ஓட விரட்டுகிறோம்.

நம்மில் பலர் யானைகள் மீதேறி சவாரி செய்திருப்போம். ஆனால் ஒரு அதிர்ச்சியான தகவல் என்னவென்றால் இயற்கையில் யானைகளின் முதுகெலும்பு பாரம் தாங்கும் அளவிற்கு உறுதியானது அல்ல.. இப்படி அதிக சுமைகளை முதுகில் சுமப்பதால் நாளடைவில் அதன் முதுகெலும்பு பலவீனமாவதாகவும் அறிஞர்கள் கூறுகின்றனர்.

இப்படி பாரம் தாங்காத முதுகை கொண்ட யானைகளின் மிக பெரிய பலமே 40,000க்கும்  மேல் தசை அடுக்கை கொண்ட அதன் நீண்ட துதிக்கை தான். ஒரு வளர்ந்த யானையால் சுமார் 770டன் வரை தனது துதிக்கையால் தூக்கமுடியும்.. பல கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள நீர் ஆதாரத்தை கூட வெகு சுலபத்தில் யானைகள் தங்களது துதிக்கையால் கண்டறியும்.

இந்த அதிசய இனத்தால் சுமார் 6 மணிநேரம் 48 கிலோமீட்டர் தொடர்ச்சியாக நீந்த முடியும். சிலர் கடலில் பல கிலோமீட்டர் நீந்தி வந்த யானைகளை கண்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.

படர்ந்த உடம்பு சிறு கல்லை போன்ற கண்கள், அதீத அறிவு உள்ள இந்த யானைகள அழிவிலிருந்து காப்பற்ற வேண்டியது மனிதர்களாகிய நம்முடைய கடமை. “இயற்கை காப்போம் வளம் பெருவம்”

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of