ஊரடங்கில் மேலும் சில தளர்வுகள் அறிவிக்கப்படும் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

1449

சூழ்நிலையை பொறுத்து, ஊரடங்கில் மேலும் சில தளர்வுகள் அறிவிக்கப்படும், என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

ஒளிரும் தமிழ்நாடு என்ற பெயரில், முக்கிய தொழிலதிபர்களுடனான ஆலோசனைக் கூட்டம், காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. தலைமைச் செயலகத்தில் இருந்து, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மற்றும் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், ஜெயக்குமார், சம்பத், தங்கமணி மற்றும் பெஞ்சமின் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், கெவின் கேர், தியாகராஜா மில், டிவிஎஸ் நிறுவனம், ராம்கோ சிமெண்ட் உட்பட, 20-க்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள் கலந்துகொண்டனர்.

இந்த ஆலோசனைக் கூட்டம் காலை 10 மணி அளவில் தொடங்கி, மதியம் 1 மணிக்கு முடிவடைந்தது. இந்த கூட்டத்தில் தொழில்துறை நிறுவனங்கள், கொரோனா தொற்று காலத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும், பொருளாதார நெருக்கடியில் இருந்து தொழில் நிறுவனங்களை எவ்வாறு மீட்டெடுப்பது, ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு, ஊரடங்கில் மேலும் சில தளர்வுகளை அளிக்க உள்ளதாக தெரிவித்தார்.