ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி..!

549

சென்னை மயிலாப்பூரில் இருக்கக்கூடிய துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தியின் இல்லத்தில் வழக்கமாக உள்ளதுபோல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். இருசக்கர வாகனத்தின் பின்புறம் அமர்ந்திருந்தவர் கையில் பெட்ரோல் குண்டு வைத்திருந்ததாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் பார்த்து உடனடியாக சத்தமிட அந்த 2 மர்ம நபர்களும் அங்கிருந்து தப்பித்துச் சென்று விட்டனர்.

இது தொடர்பாக மயிலாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். அதுமட்டுமின்றி அந்த பகுதியில் இருக்கக்கூடிய சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் கூடுதலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மர்ம நபர்கள் யார் என்று தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டுபிடித்து சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இன்று இந்த செயலில் ஈடுபட முயன்றவர்கள் யார் என சிசிடிவி காட்சிகள் அடிப்படையில், குறிப்பாக மாதவப் பெருமாள் கோவில் அருகில் இருக்கக்கூடிய வீடுகள் மற்றும் பொது இடங்களில் இருக்கக்கூடிய சிசிடிவி காட்சிகளை கொண்டு சட்டப்படியான நடவடிக்கை மேற்கொண்டு மேற்கொள்ளப்படும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of