கன்னத்தில் அறை வாங்கிய ஹர்திக் பட்டேல்! வைரலாகும் பரபரப்பு வீடியோ!

684

குஜராத்தில் தேர்தல் பிரச்சாரப்பொதுக்கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த ஹர்திக் பட்டேலை, மேடையில் வைத்தே ஒருவர் திடீரென கன்னத்தில் அறைந்தார். பின்னர், காங்கிரஸ் கட்சியினர் அந்த நபரை பிடித்து உதைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

குஜராத் மாநிலத்தில், பட்டேல் சமூகத்தினரின் இடஒதுக்கீட்டிற்காக போராடிய ஹர்திக் பட்டேல், அண்மையில் காங்கிரஸ் கட்சியின் இணைந்தார்.

இந்நிலையில், குஜராத் மாநிலத்தில்,சுரேந்தர் நகர் மாவட்டத்தில், பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, மேடைக்கு வந்த ஒருநபர் ஹர்திக் பட்டேலின் கன்னத்தில் திடீரென அறைந்த சம்பவம் தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தாக்கிய நபரை பிடித்த காங்கிரஸ் தொண்டர்களை அவரை அடித்து உதைத்தனர். பின்னர், ஹர்திக்பட்டேலை தாக்கிய நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of