முதல்வர் கன்னத்தில் அறைந்த மர்ம நபர்! வெளியான பகீர் வீடியோ!

431

பாராளுமன்ற தேர்தலையொட்டி இந்தியாவில் தேர்தல் நடைபெற இருக்கும் இடங்களில் அரசியல் தலைவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லியில் உள்ள மோத்தி நகரில் திறந்த வேனில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, கூட்டத்தில் இருந்த நபர் ஒருவர், அரவிந்த கெஜ்ரிவால் மீது தாக்குதல் நடத்தினார்.

மேலும், அங்கிருந்து அவர் தப்பியோடி உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. தப்பியோடிய அந்த மர்ம நபர் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of