பெற்றத் தாயை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்த சிறுவன்- கல்கத்தாவில் பயங்கரம்

695

கல்கத்தாவின் ஜகத்பூரைச் சேர்ந்த 17 வயது சிறுவன் பைக் வாங்கித் தர மறுத்த தாயை மண்ணணெய் ஊற்றி கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது.

petrol-seller-fire-house

கல்கத்தா ஜகத்பூரில் சோமா என்ற பெண் தன் 17 வயது மகனுடன் ஒரு அறை கொண்ட வாடகை வீட்டில் எட்டு மாதங்களாக வசித்து வந்தார்.

கணவரை விட்டு பிரிந்து தனியாக வாழ்ந்து வரும் இவர், சிறு துணி கடை வைத்து நடத்தி வருகிறார்.

இவரது மகன் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறான்.

தற்பொழுது  பள்ளியில் தேர்வு நடந்து கொண்டிருப்பதால் தேர்வில் வெற்றி பெற்றால் இருசக்கர வாகனம் வாங்கித் தருகிறேன் என அவனது தாயான சோமா உறுதி அளித்துள்ளார்.

ஆனால் இரு சக்கர வாகனம் வாங்கித் தராததால் கோபத்தில் இருந்த மகன் தனது தாயை வீட்டுக்குள் அடைத்து மண்ணென்ணை ஊற்றி வீட்டில் தீயை பற்ற வைத்தார். வீடு முழுவதும் தீப்பற்றி எரிந்ததையடுத்து சோமாவும் இந்த தீயில் சிக்கினார்.

இதனால் சோமாவின் உடலில் 80 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டது. கதவை உடைத்துக்கொண்டு வெளியே வந்து வலியில் அலறிய சோமாவை அருகில் இருந்தவர்கள், போர்வை கொண்டு தீயை அணைத்தனர்.

kolkata fire

தப்பிக்க முயன்ற மகனை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். கைது செய்த காவல்துறையினர் சிறார் சிறையில் அச்சிறுவனை சிறார் சிறையில் அடைத்தனர்.

பைக் வாங்கி தராததால் தன்னைப் பெற்றத் தாயை கொலை செய்யும் அளவிற்கு அந்த சிறுவன் சென்றுள்ளதை கண்டு பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கடும் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இதே போன்று கடந்த சில தினங்களுக்கு முன்பு விஸ்வாசம் படம் வெளியான சமயத்தில் முதல் காட்சியை பார்க்க தந்தை பணம் கொடுக்க மறுத்ததால் தனது தந்தையை 19 வயதுடைய மகன் பெட்ரோல் ஊற்றி எரித்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of