“கல்யாணம் பண்ணுவியா.. இல்லையா..” தந்தைக்கு மகன் செய்த கொடூரம்..!

513

திருவாரூர் மாவட்டம், பாலங்குடி கிராமத்தை சேர்ந்த செல்லையன் என்பவரின் கடைசி மகன் சேகர், டிப்ளமோ படித்துவிட்டு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில், கடந்த 3 ஆண்டுகளாக வேலை ஏதுமின்றி வீட்டில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், 34வயதான தனக்கு திருமணம் செய்து வைக்கக்கோரி கடந்த இரு தினங்களுக்கு முன்பு தந்தையிடம் சேகர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த சேகர் தனது தந்தை செல்லையனின் தலையில் உருட்டுக்கட்டையால் தாக்கியுள்ளார்.

இதில், மயங்கிவிழுந்த செல்லயன் மீட்கப்பட்டு, திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அவர் உயிரிழந்ததை தொடர்ந்து, அவரது மகன் தானாக முன்வந்து திருவாரூர் தாலுகா காவல்நிலையத்தில் சரணடைந்தார்.

Advertisement