தாய் சொன்ன ஒரே ஒரு வார்த்தை..! கொலை செய்த மகன்..! தனக்கும் கொடுத்த பயங்கர தண்டனை..!

573

கரூர் மாவட்டம் சின்னகுளத்துப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அமுதவள்ளி. கணவரை இழந்து வாழ்ந்து வந்த அமுதவள்ளிக்கு, ராஜரத்தினம் என்ற மகன் உள்ளார். ராஜரத்தினத்துக்கு, மகாலட்சுமி என்ற மனைவியும், 12 வயதில் ஒரு மகனும் உள்ளார்கள்.

மகனுக்கு திருமணமாகியதால், அவருக்கு தொல்லை கொடுக்கக்கூடாது என்பதற்காக, அமுதவள்ளி தனியாக வீடு எடுத்து வசித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அமுதவள்ளி கழிவறையில் வழுக்கி விழுந்து, இடுப்பு எலும்பு முறிந்து படுத்த படுக்கையாகி உள்ளார். இதையடுத்து, தாயை தனது வீட்டிற்கு ராஜரத்தினம் அழைத்து வந்து, கண்ணும் கருத்துமாக பார்த்து வந்துள்ளார்.

தனக்காக மகன் படும் துயரத்தால், தனக்கு விஷம் கொடுத்து கொலை செய்துவிடும் படி, அமுதவள்ளி அடிக்கடி வற்புறுத்தியதாக சொல்லப்படுகிறது. இவ்வாறு அவர் தொடர்ந்து வற்புறுத்தவே, கடந்த 4-ஆம் தேதி அன்று விஷ மாத்திரைகளை தாய்க்கு  அளித்துள்ளார் ராஜரத்தினம்.

அதனை அமுதவள்ளியும் சாப்பிட்ட நிலையில், குற்ற உணர்ச்சி தாங்காத ராஜரத்தினம், மீதமிருந்த மாத்திரைகளை சாப்பிட்டுள்ளார். இது ஒரு புறம் நடக்க, ராஜரத்தினத்தின் மனைவி மகாலட்சுமியும், அவரது மகனும், மற்றொரு அறையில் தூங்கிக்கொண்டிருந்தனர்.

காலை விடிந்ததும், ராஜரத்தினம் வயிற்று வலியால் துடித்துள்ளார். பின்னர் அவரிடம் என்ன ஆனது எனக்கேட்டபோது, நடந்தவற்றை உறவினர்களிடம் ராஜரத்தினம் சொல்லியதைத்தொடர்ந்து, மருத்துவமனைக்கு உறவினர்கள் அழைத்து சென்றனர்.

இதனிடையே, உறங்கிக்கொண்டிருந்ததாக நினைத்துக்கொண்டிருந்த அமுதவள்ளியும் உயிரிழந்தது உறவினர்களுக்கு தெரியவந்தது. மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வந்த ராஜரத்தினமும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of