மகனை தீர்த்துக்கட்டி நாடகமாடிய குடும்பம்

488

மதுபோதையில் தகராறு செய்த பட்டதாரி மகனை கொலை செய்து தற்கொலை என நாடகமாடிய தந்தையை மற்ற இரு மகன்களுடன் போலீஸார் கைது செய்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஐய்யம்பேட்டை கந்தப்பர் தெருவை சேர்ந்தவர் மணி. ஓய்வு பெற்ற அரசு ஊழியர். இவருக்கு மனைவி மற்றும் மூன்று மகன்கள். மூவரும் பட்டதாரிகள்.

இரண்டு மகன்கள் உள்ளூரில் வேலை செய்கின்றனர். மகேஷ் என்ற மகன் சிங்கப்பூரில் பணிபுரிந்து வந்தார்.

சிங்கப்பூரில் வேலை செய்து வந்த தன்னுடைய இரண்டாவது மகன் மகேஷ் அவ்வப்போது தன்னுடைய சொந்த ஊருக்கு வந்து செல்வது வழக்கம்.

இந்த சூழ்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தன் சொந்த ஊரான ஐய்யம்பேட்டைக்கு வந்தவர் மதுபோதையில் தன்னுடைய தந்தையுடன் தகராறில் ஈடுபட்டார்.

இதையடுத்து அவர் ஒரு அறையில் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்த வாலாஜாபாத் கால் ஆய்வாளர் மணிமாறன் மற்றும் மாவட்ட துணை கண்காணிப்பாளர் பாலசுப்ரமணியன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை செய்தனர்.

மேலும் துணைக் கண்காணிப்பாளர் கீழ் இயங்கும் தனிப்படை தீவிர விசாரணை செய்ததில் மகேஷின் தந்தை மணி, மூத்த மகன் மோகனவேல், இளைய மகன் ரமேஷ் ஆகிய மூவரும் சேர்ந்து மகேசை அடித்து கொலை செய்தது தெரியவந்தது.

இதனால் தாங்கள் மாட்டிக் கொள்வோம் என்ற அச்சத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது போல் மகேஷை மின்விசிறியில் தொங்கவிட்டதும் தெரியவந்தது.

இதனையடுத்து மணி மற்றும் அவரின் மனைவி தமிழ்ச்செல்வி, மூத்த மகன் மோகனவேல், இளைய மகன் ரமேஷ் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.

 

போதையில் தகராறு செய்த மகனை குடும்பத்தினரே கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of