அம்மா எங்கே இருக்கிறாய்..! 39 ஆண்டுகளுக்கு பிறகு தேடும் மகன்

1678

தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை பகுதியை பூர்வீகமாக கொண்ட கலியமூர்த்தி தனலெட்சுமி தம்பதியினர் வறுமை காரணமாக, தங்களது மகன் டேவிட் சாந்தகுமாரை 1979ஆம் ஆண்டு பல்லாவரத்தில் உள்ள தொண்டு நிறுவனத்தின் மூலம் டென்மார்க் நாட்டைச்சேர்ந்த தம்பதினருக்கு முறைப்படி தத்து கொடுத்துள்ளனர்.

39 ஆண்டுகளுக்கு பிறகு டேவிட், தனது பெற்றோரை தேடி தஞ்சையில் பல்வேறு பகுதிகளில் தேடி அலையும் காட்சிகள் கண் கலங்க வைக்கிறது.

இந்த முயற்சியின்போது கிடைத்த குடும்ப புகைப்படங்கள் மூலம் தேடும் பணியில் தீவிரமாக ஈடுப்பட்டு உள்ளார். மேலும், ஊராட்சி அலுவலகத்தின் உதவியுடன் ஆவணங்களையும் பார்வையிட்டார்.

தன்னுடைய பெற்றோரை எப்படியும் கண்டறிந்து விடுவேன் என்ற நம்பிக்கை உள்ளதாகவும், தன்னுடைய முயற்சி தொடரும் எனவும் டேவிட் கூறியுள்ளார்.