மீண்டும் காங்கிரஸ் தலைவரானார் சோனியாகாந்தி

591

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக சோனியாகாந்தி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 52 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது மட்டுமில்லாமல் 400 தொகுதிகளில் படுதோல்வியை தழுவியது. 

Image result for sonia gandhi

இந்நிலையில் மே மாதம் 25-ம் தேதி காங்கிரஸ் கட்சியில் இருந்து ராகுல் காந்தி தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்த அவர், தனக்கு பதில் புதிய தலைவரை தேர்வு செய்து கொள்ளும்படி அறிவித்தார்.  ஆனால் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இதை ஏற்கவில்லை. 

அவரை சமரசம் செய்து வந்தும்,  அவர் ராஜினாமாவை திரும்ப பெற ராகுல்காந்தி திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.  பிரியங்காவை புதிய தலைவராக்க முயற்சி நடந்தபோதும், அதையும் ராகுல்காந்தி தடுத்து நிறுத்தினார்.  இதனால் கடந்த 77 நாட்களாக காங்கிரஸ் கட்சி தலைவர் பதவி இல்லாமல் தள்ளாடியபடி இருந்தது. 

Image result for priyanka gandhi

இந்த நிலையில் இன்று தலைநகர் டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் நடந்தது.  காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளர்கள் 65பேர் மற்றும் மாநில தலைவர்கள், சட்டசபை காங்கிரஸ் கட்சி தலைவர் கலந்து கொண்டனர். 

Image result for sonia gandhi

இதில் மன்மோகன் சிங் தலைமையிலான 5 குழுக்கள் அமைக்கப்பட்டன.  மாநில முதல் மந்திரிகள், மாநில தலைவர்கள் உள்ளிட்ட பலர் இதில் அடங்குவர்.

Image result for sonia gandhi

ந்நிலையில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக சோனியா சாந்தி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என மூத்த தலைவரான குலாம் நபி ஆசாத் அறிவித்தார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of