ராகுலுக்கு ரூ.5 லட்சம் கடன் கொடுத்த சோனியா.., சொத்து மதிப்பு ரூ.12 கோடி

466

நடக்க இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி நேற்று தான் போட்டியிடும் ரேபரேலி தொகுகியில் தனது வேட்புமனுவையும், அதனுடன் தனது சொத்து விவரங்கள் அடங்கிய பிரமாண பத்திரத்தையும் தாக்கல் செய்தார்.

அதில், தனக்கு மொத்தம் ரூ.11 கோடியே 82 லட்சம் மதிப்புள்ள சொத்துகள் இருப்பதாக கூறியுள்ளார். இவற்றில் அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.4 கோடியே 29 லட்சம். ரொக்கமாக ரூ.60 லட்சமும், வங்கியில் டெபாசிட்டாக ரூ.16 லட்சத்து 50 ஆயிரமும் இருக்கிறது.

தன் மகனும், காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்திக்கு கடனாக ரூ.5 லட்சம் கொடுத்துள்ளார். பா.ஜனதா எம்.பி. சுப்பிரமணிய சாமி தாக்கல் செய்த ஒரு குற்றவியல் வழக்கு, தன் மீது இருப்பதாக சோனியா காந்தி கூறியுள்ளார்.

கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது, சோனியா காந்தியின் சொத்து மதிப்பு ரூ.9 கோடியே 28 லட்சமாக இருந்தது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of