4 பெண் குழந்தைகளை தத்தெடுத்தார் நடிகர் சோனு சூட்

128

ரசிகர்களால் திரைப்படங்களில் வில்லனாக பார்க்கப்பட்ட ஒரு நடிகர் தான் சோனு சூட். ஆனால் தற்போது இவர் ரியல் ஹீரோவாகப் பார்க்கப்படுகிறார். உத்திரகாண்ட் வெள்ளத்தில் உயிரிழந்த தொழிலாளி ஒருவரின் 4 மகள்களுடைய படிப்பு செலவு மற்றும் வாழ்வாதாரத்திற்கு தேவையான உதவிகளை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் இனி இந்த குடும்பம் என்னுடையது என்று அவர் பதிவு செய்துள்ளார். அவர் அந்த நான்கு பெண் குழந்தைகளையும் தத்தெடுத்துள்ளதாகவே பார்க்கப்படுகிறது. இவரது இந்த  பதிவுக்கு ரசிகர்கள் மத்தியில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Advertisement