விரைவில் 20 ரூபாய் நாணயம் வௌயியீடு – மத்திய அரசு

119

கடந்த 2009ம் ஆண்டு முதன் முதலாக ரூ.10 நாணயங்கள் அரசு வெளியிட்டது. அதன் பின்னர் தற்போது வரை 13 முறை ரூ.10 நாணயத்தின் வடிவத்தை மாற்றி வெளியிடப்பட்டுள்ளது. போலி நாணயங்களோ என வியாபாரிகள் குழம்பி வாங்க மறுப்பதற்கு இதுவும் ஒரு காரணமாகும். இந்நிலையில் ரூ.10 நாணயங்கள் வெளியிடப்பட்டு 10 ஆண்டுகள் கடந்த நிலையில் ரூ.20 நாணயங்கள் வெளியிடப்படும் என நிதியமைச்சகம்  அறிவித்துள்ளது.

ஏற்கனவே ரூ.1, ரூ.2, ரூ.5, ரூ.10 நாணயங்கள் புழக்கத்தில் உள்ளன. இதனை தொடர்ந்து  ரூ.20 மதிப்பு நாணயங்களை வெளியிட அரசு முடிவு செய்துள்ளது.

மற்ற நாணயங்கள் வட்ட வடிவில் இருக்கும் நிலையில் ரூ.20 நாணயங்கள் 12 கோணங்கள் அல்லது பக்கங்கள் கொண்ட வடிவில் இருக்கும் என்ற கூறப்படுகிறது.

இதனிடையே, டெல்லியில் பார்வையற்றவர்கள் எளிதாக அறிந்து கொள்ளும் வகையில், புதிய நாணயங்களை  பிரதமர் நரேந்திர மோடி நேற்று வெளியிட்டார். ரூ.1. ரூ.2, ரூ.5 மற்றும் ரூ.10  மதிப்பு நாணயங்கள் வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து விரைவில் ரூ.20 நாணயம்  வெளியிடப்பட உள்ளது.