சூர்யாவிற்கு வந்த பெரிய சிக்கல்.. உயர்நீதிமன்றம் அதிரடி..

676

நடிகர் சூர்யா நடித்து வெளியாக உள்ள சூரரைப்போற்று படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடலில், சாதிகள் குறித்த வரிகள் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில் அனைத்து சாதியினரும் அமைதியாக வாழும் தமிழகத்தில் இதுபோன்ற பாடல் பிரச்னை ஏற்படுத்தும் என்பதால், 2022 வரை அந்த படத்துக்கு தடை விதிக்க கோரி தர்மபுரியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.

அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படாததால் கார்த்திக் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரரின் புகார் காவல் கண்காணிப்பாளருக்கு வந்து சேரவில்லை என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, காவல் கண்காணிப்பாளருக்கு மீண்டும் புகார் மனுவை அளிக்க மனுதாரருக்கு அறிவுறுத்திய நீதிபதி, அந்த புகாரை சட்டப்படி பரிசீலித்து நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு உத்தரவிட்டார். இந்த உத்தரவால், சூர்யாவின் சூரறைப்போற்று திரைப்படம் வெளியாகுமா..? வெளியாகாதா..? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of