சூரறைப்போற்று படத்தில் கலாமாக நடித்தவருக்கு நேர்ந்த சோகம்..!

123373

சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, காளி வெங்கட் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் சூரறைப்போற்று. சுதா கொங்காரா இயக்கியுள்ள இந்த திரைப்படத்திற்கு, ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.

அமேசான் பிரைமில் வெளியாகியுள்ள இந்த திரைப்படம், நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த திரைப்படத்தின் குறிப்பிட்ட காட்சியில், மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமாக ஒருவர் நடித்திருப்பார். இவரது உண்மையான பெயர் ஷேக் மைதீன்.

உடுமலைப்பேட்டையை சேர்ந்த இவர், பார்ப்பதற்கு கலாம் சாயலில் இருப்பதாலும், அவர் மீது கொண்ட பற்றாலும், உருவத்தை அவரைப்போலவே மாற்றிக்கொண்டுள்ளார். இவரை உடுமலைப்பேட்டை கலாம் என்று அனைவரும் அழைப்பார்களாம்.

சூரறைப்போற்று படத்தில் நடித்து முடித்திருந்த நிலையில், அந்த படம் வெளியாவதற்கு முன்பாகவே ஷேக் மைதீன் இயற்கை எய்திவிட்டார். தான் மிகவும் நேசித்த அப்துல் கலாம் கதாபாத்திரத்தில் நடித்துவிட்டு, அதனை பார்ப்பதற்குள் அவர் உயிரிழந்திருப்பது, பலருக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement