வரவிருக்கும் தேர்தலுக்காக கமலிடம் ஆதரவு கோரிய பிரபல இயக்குநர்! யார் தெரியுமா?

774

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கான புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் 23-ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் நாசர் – விஷால் அணிக்கு எதிராக பாக்யராஜ் தலைமையிலான அணி களம் இறங்குகிறது.

இரு அணிகளும் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளதால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில், தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியினர் சென்னை ஆழ்வார்பேட்டையில் நடிகர் கமல்ஹாசனை சந்தித்து ஆதரவு கோரினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாக்யராஜ் அணியினர், தேர்தல் அறிக்கையை வெளியிட்டனர். அதில் 6 மாதத்திற்குள் நடிகர் சங்க கட்டிடம் கட்டப்படும் என்றும் மூத்த கலைஞர்களுக்கு 5 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு மாதந்தோறும் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூத்த கலைஞர்களுக்கான முதியோர் இல்லத்திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

Advertisement