அத்துமீறிய ஸ்ரேயா..! கைது செய்த போலீஸ்..? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

1197

எனக்கு 20 உனக்கு 18, சிவாஜி, மழை உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பதிந்தவர் நடிகை ஸ்ரேயா. இவர் தமிழ் மட்டுமின்றி, பல்வேறு மொழி திரைப்படங்களிலும் நடித்து புகழ் பெற்றவர்.

இவ்வாறு நல்ல விதமாகவே சென்றுக்கொண்டிருந்த நிலையில், அவர் மார்கெட் கொஞ்சம் கொஞ்சமாக சரிய தொடங்கி, வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார். இதையடுத்து தனது காதலரை திருமணம் செய்துக்கொண்ட அவர், கொஞ்ச காலம் சினிமாவுக்கு பிரேக் கொடுத்திருந்து, தற்போது மீண்டும் நடிக்க துவங்கியுள்ளார்.

தமிழில் நடிகர் விமல் நடிக்கும் சண்டைக்காரி திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ரேயா நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு லண்டனில் நடைபெற்று வந்த போது, நடிகை ஸ்ரேயா மிகவும் பாதுகாப்புடைய பகுதியில் அத்துமீறி நுழைய முயன்றதாகவும், இதனையறிந்த லண்டன் காவல்துறையினர், ஸ்ரேயாவை கைது செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தகவலில் எந்த அளவிற்கு உண்மை உள்ளது என்று தெரியவில்லை. ஆனால் இதுகுறித்த தகவல் பல்வேறு தமிழ் மற்றும் ஆங்கில இணையதளங்களில் கூறப்பட்டுள்ளது. இதனை அறிந்த ஸ்ரேயாவின் தீவிர ரசிகர்களும் அதிர்ச்சியில் உள்ளனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of