உ.பி.யில் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகள் தொகுதி பங்கீடு

690

இன்னும் சில மாதங்களில் நடக்க இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் கூட்டணி குறித்த தகவல்களை வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலுக்காக மாயாவதியின் பகுஜன் சமாஜி கட்சியும், அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி கட்சியும் கூட்டணி அமைத்துள்ளது.இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இருவரும் ஒன்றாக வெளியிட்டனர். அதுமட்டுமின்றி, இந்த கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு இடமில்லை.

இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தொகுதி பங்கீடு குறித்த விவரங்களை இரண்டு கட்சிகளும் இன்று வெளியிட்டுள்ளது.

அதில் சமாஜ்வாதி கட்சிக்கு 37 இடங்களும், பகுஜன் சமாஜ் கட்சிக்கு 38 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளது.