முதன்முறையாக விண்வெளி பூங்கா : இஸ்ரோவுடன் இணைந்த மாநில அரசு

303

நாட்டிலேயே முதன்முறையாக இஸ்ரோவுடன் இணைந்து கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் விண்வெளி பூங்கா அமைக்க அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.

திருவனந்தபுரத்தில், ‘இஸ்ரோ’வின் முக்கிய மையமான VSSC என்னும் விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் உள்ளது.

குடியரசுத் முன்னாள் தலைவர் அப்துல் கலாம் இங்கு முதன்மை விஞ்ஞானியாக பணியாற்றியவர். இந்நிலையில் வி.எஸ்.எஸ்.சி., நிதியுதவியுடன் திருவனந்தபுரத்தில் விண்வெளி பூங்கா அமைக்க இருப்பதாக, கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே, திருவனந்தபுரத்தில்,100 ஏக்கர் பரப்பளவில் முழெறடநனபந உவைல அமைக்கும் திட்டப்பணிகள் நடந்து வருகின்றன. அதில், 20 ஏக்கர் நிலத்தில், நாட்டிலேயே முதலாவதாக விண்வெளி பூங்கா அமைக்கப்படுகிறது.