“திருச்சியில் விண்வெளி ஆய்வு மையம்”

1026

“திருச்சியில் இஸ்ரோ சார்பில் விண்வெளி ஆய்வு மையம் அமைக்கப்படும் என்று இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார். இது பற்றி டெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் அனைத்து மாநில மாணவர்களை கொண்டு இளம் விஞ்ஞானிகள் திட்டத்தை இஸ்ரோ நடத்த உள்ளதாக கூறினார்.

திரிபுரா, மற்ற மாநிலங்களில் மேலும் 4 விண்வெளி ஆய்வு மையங்கள் அமைக்கப்படும் என சிவன் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தை ஒருமாதம் நடத்த உள்ளதாகவும்; செயற்கைக்கோள், விண்வெளி ஆராய்ச்சி குறித்து வகுப்புகளும் நடத்தப்படும் எனவும் இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of