மில்லியனில் சம்பாதித்த மாடல் அழகி, இப்போது தெருவில் தங்கும் அவலம்

712

ஒரு காலத்தில் வருடத்திற்கு 1 மில்லியன் பவுண்ட் வரை சம்பாதித்த மாடல் அழகி தற்போது தங்குவதற்கு ஒரு வீடு இல்லாமல் பார்சிலோனா தெருவோரத்தில் வசித்து வருகிறார். ஸ்பெயின் நாட்டை சேர்ந்த நஸ்டாசியா என்பவர் 1980களில் பிரபலமான மாடல் அழகிகளில் ஒருவராக வலம்வந்தவர். அடுத்தடுத்து கிடைத்த அதிர்ஷ்டத்தால் நியூயார்க் நகரத்திற்கு பறந்து, அங்கு உள்ள பிரபலமான மாடல் ஏஜென்ஸியில் சேர்ந்தார்.

இப்படி புகழின் உச்சியில் இருந்தவர், தற்போது பார்சிலோனா தெருவில் தனது வாழ்க்கையை கழித்து வருகிறார். இந்த செய்தியை கேள்விபட்ட அவருடைய கடந்த கால தோழிகள் அவருக்கு உதவ முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of