முடிவை முன்பே அறிந்தார்..? மரணத்திற்கு முன்பு SPB செய்த செயல்..!

2415

பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கடந்த வெள்ளிக்கிழமையன்று காலமானார். அவரது உடல், தாமரைப்பாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் அரசு மரியாதையுடன் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் தனது மரணத்தை முன்னரே கனித்து விட்டதாக கூறி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, பெருந்தொற்றால் பாதிக்கப்படுவதற்கு முன்பு, ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சிற்பி ஒருவரிடம், தனது தந்தை மற்றும் தாய் சிலையை வடிவமைக்க ஆர்டர் செய்துள்ளார்.

மேலும், தனது சிலையையும் வடிமைக்க வேண்டும் என்று அந்த சிற்பியிடம் கூறியுள்ளார். அதற்குள், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், சிற்பியால் சிலையை ஒப்படைக்க முடியவில்லை. அதற்குள் அவர் உயிரிழந்துவிட்டார்.

நடக்கும் விஷயங்களை முன்னரே கனிக்கும் திறமைக்கொண்டவர் எஸ்.பி.பி என்று அவரது நட்பு வட்டாரத்தில் கூறுவதுண்டு. அதேபோல் தான் தனது மரணத்தையும் அவர் முன்னரே கனித்துவிட்டார் என நெட்டிசன்கள் சோகமாக கூறி வருகின்றனர். இந்த தகவல் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.