பிரபல பின்னணி பாடகர் S.P.B காலமானார்

824

புகழ்பெற்ற திரைப்பட பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியன் சில மாதங்களாக உடல்நிலைகுறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி காலமானார். இதனால் சினிமா துறையினர் மற்றும் அவரது ரசிகர்கள் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்து கொண்டு வருகின்றனர்.

பாலசுப்பிரமணியன் எஸ்.பி.சம்பமூர்த்தி மற்றும் சகுந்தலம்மா தம்பதியருக்கு ஜூன் 4, 1946 அன்று நெல்லூர் மாவட்டம், மதராஸ் மாகாணம், ஆந்திராவில் மாநிலத்தில் பிறந்தார் எஸ்.பி.பாலசுப்பிரமணியன். இவரருடன் உடன் பிறந்தவர்கள் இரண்டு சகோதரர்கள், ஐந்து சகோதரிகள்.

பரவலாக எஸ்.பி.பி என்ற மூன்று எழுத்துகளால் அனைவராலும் அறியப்படுபவர். இவர். 1966-ல் ஒரு தெலுங்குத் திரைப்படத்தில் பாட தொடங்கியதில் இருந்து 2020 வரை மக்களுக்கு தனது பாடல்களை திரைப்படத்தின் மூலமாகவும், சமூகவலைத்தளத்தின் மூலமாகவும் தனது இனிய குரலால் மக்களை இசை மழையில் நனைய வைத்தவார்.

இவரது இசை பயணத்தில் உலகளவில் அளவற்ற பாடல்களை பாடி கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். இது மட்டுமல்லாமல் பல விருதுகளையும் பெற்றுள்ளார். இவருக்கு 2001 ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதும் 20111 ஆம் ஆண்டு பத்மபூஷண் விருதும், 2916 ஆம் ஆண்டு 47வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய திரைப்பட பிரமுகர் விருதும் வழங்கப்பட்டது. இவர் பிறமொழி பாடல்கள் பாடியிருந்தாலும்.

இவர் தமிழில் முதலில் பாடிய பாடல் ஹோட்டல் ரம்பா திரைப்படத்தில் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி இசையில் எல்.ஆர்.ஈஸ்வரியோடு இணைந்து அத்தனோடு இப்படியிருந்து எத்தனை நாளாச்சு என்ற பாடலை பாடினார். சில சூழ்நிலை காரணமாக இப்படம் வெளியிடப்படவில்லை.

இப்படத்தின் பின் பாடிய பாடல் மக்கள் நல்ல வரவேற்பை பெற்று ரசிகர் கூட்டம் கூட ஆரம்பித்தது. திரைப்படங்களில் பல பிரபல நடிகர்களுக்கு பின்னணி கொடுத்துள்ளார். இவர் இசைத்துறை மட்டுமல்லாமல் நடிப்பிலும் தென்னிந்திய திரைப்படங்களில் 70க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, இந்நான்கு மொழிகளில் நாற்பத்தைந்து திரப்படத்திற்கு மேல் இசையமைத்திருக்கிறார். யாரலும் இவர் சாதனைகளை வெல்ல முடியாது இவரது இசையையும் அழிக்கவும் முடியாது என்ற நிலை இருந்தது.

ஆனால் கொரோனா என்ற கொடிய வைரஸ் இவரது இசையை அழிக்க முடிவு செய்து அவரை தாக்கியது. அப்போது பெரும் சோகத்தை அனைவரையும் ஆழ்த்தியது மட்டுமல்லாமல் அவருக்கு பல இடங்களில் சினிமாதுறையினர் மற்றும் ரசிகர்களும் பிரார்த்தனைகள் வைத்தார்கள் ஆனால் அந்த பிரார்த்தனைக்கு தற்போது பலனில்லாமல் போனது மிகுந்த வருத்தமளிக்கிறது.