“பள்ளி சிறுவர்களிடம் பரவும் விபரீத பழக்கம்..” அதிர்ச்சி ரிப்போர்ட்..!

2646

சமுதாயத்தில் பரவி வரும் புதுவித பழக்கமான கற்பூர போதை குறித்து அதிர்ச்சி தரும் தகவல்களை முன்வைக்கிறது இந்த சிறப்புத் தொகுப்பு..

பஞ்சர் ஒட்ட பயன்படுத்தப்படும் கெமிக்கல், பெட்ரோல் ஆகிய பொருட்களில் போதை நிலையை அடையலாம் என்று கூறி வரும் நிலையில், பள்ளி மாணவர்களிடம் பரவும் ஒரு பழக்கம் வயிற்றில் புளியை கறைக்க வைக்கிறது. ஆம், அது தான் கற்பூர போதை பழக்கம்.

அனைத்து சிறு சிறு கடைகளிலும் எளிதாக கிடைக்கும் ஒரு பொருள் தான் கற்பூரம். இந்த கற்பூரத்தை 2 நிமிடங்களுக்கு மேல் முகர்ந்து பார்க்கும்போது, கஞ்சா போன்ற போதை வஸ்துகளுக்கு ஈடாக போதை கிடைக்கிறதாம். கற்பூரத்தில் எவ்வாறு போதை கிடைக்கிறது என்று ஆராய்ந்து பார்க்கும்போது தான் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

நாம் அனைவரும் தற்போது பயன்படுத்தும் கற்பூரங்களில் பாதிக்கு வாசிக்கு மேல் போலியானது தானாம். இந்த போலியான கற்பூரங்களில், டெர்பீன்ஸ் எனப்படும் வேதிப்பொருள் பயன்படுத்தப்படுகிறது.

விஷத்தன்மை வாய்ந்த இந்த வேதிப்பொருளால் தான், போதை வஸ்துகளுக்கு சமமாக கற்பூரத்திலும் போதை கிடைக்கிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இந்த பழக்கத்தில் தொடர்ந்து ஈடுபடும் நபர்களுக்கு, வலிப்பு, நரம்பு தளர்ச்சி, மூளை செயல்பாடு குறைதல் போன்ற பல்வேறு பாதிப்புகள் ஏற்படலாம் என்றும் மருத்துவர்கள் அதிர வைக்கின்றனர்.

மிகவும் எளிதில் கிடைக்கும் இந்த பொருள்களுக்கு மாணவர்கள் பலியாகாமல் இருக்க, பெற்றோர்களும், ஆசிரியர்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம்..

 

– மா.கார்த்திக்

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of