“உங்கள் நிழலில் ஒதுங்கிக்கொள்கிறோம்..” மருத்துவர்களுக்கு நன்றி செலுத்தும் சிறப்புத்தொகுப்பு

5166

கொடூர அரக்கன் கொரோனாவுக்கு எதிராக போராடும் மருத்துவர்களுக்கு நன்றி செலுத்தும் பாமரனின் சில வரிகள் இங்கே காத்துக்கிடக்கிறது..

உலகம் என்ற ரோஜாக்களின் மீது கொரோனா என்ற முட்கள் தொடர்ந்து முளைத்துக்கொண்டே இருக்கிறது. ரோஜாக்களில் முட்கள் என்ற நிலை மாறி, முட்களில் ரோஜா என்ற நிலை வராமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு கொண்டு தான் இருக்கின்றன.

இதில் மிகவும் தீவிரமாக இயங்கி வருபவர்கள் மருத்துவர்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.. கடவுள் தான் காப்பாற்றுவார் என்று மருத்துவர்கள் கூறும் நிலை மாறி, மருத்துவர் தான் காப்பாற்றுவார்.. கதவை சாத்துங்கள்.. என்று கடவுள் கூறும் நிலை வந்துவிட்டது.

அந்த மெல்லிய முகங்கள் எல்லாம் இவ்வளவு வலுவானது என்பதை முகத்தில் படிந்திருக்கும் வடுக்கள் தினம்தோறும் நினைவுப்படுத்திக்கொண்டே இருக்கின்றன.. அதன் வலி அந்த மாஸ்க்குகளுக்கு மட்டுமே தெரியும்..

தாகம் வந்தால் தான் தண்ணீர் ருசி புரியும்.. சோகம் வந்தால் தான் மனம் அமைதியின் ருசி அறியும்.. அதன்படியே உயிரைக்கொடுத்து போராடும் உங்களின் ருசியும் இந்த உலகம் தற்போது புரிந்துக்கொண்டிருக்கிறது.

இன்னும் சில நாட்கள் தான்.. தொட்டு விட்டீர்கள்.. விடாதீர்கள்.. உங்கள் பாதத்தை அந்த கொரோனா தொட்டு, மன்னை கவ்வுவான்.. மாற்று மருந்து மதில் மேல் இல்லை.. அது விரல் நுனியில் தான் உள்ளது.. அதுவரை உங்களின் நிழலில் நாங்கள் ஒதுங்கிக்கொள்கிறோம்..

உங்களோடு சேர்த்து.. அரசுக்கும்.. தூய்மை தொழிலாளர்களுக்கும்.. ஊடகத்துறையினருக்கும் பொதுமக்கள் சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்..

மா.கார்த்திக்