தொடர் விடுமுறையையொட்டி சிறப்பு பேருந்துகள் இயக்கம்

367

மகாவீர் ஜெயந்தி, தேர்தல் வாக்குப்பதிவு மற்றும் புனித வெள்ளி என தொடர் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து சனி மற்றும் ஞாயிறு விடுமுறை நாட்கள் என்பதால், சென்னையில் இருந்து வெளியூர் செல்ல நேற்று 650 சிறப்பு பேருந்துகளும், இன்று 1500 சிறப்பு பேருந்துகளும் அரசு போக்குவரத்து துறையால் இயக்கப்படுகின்றன.

விடுமுறைக்காக வெளியூர் செல்பவர்கள் மீண்டும் சென்னை திரும்ப வசதியாக, வரும் 21-ஆம் தேதி தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் சென்னைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துறை தெரிவித்துள்ளது.

கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டாலும் ஒரு சில வழித்தடங்களில் போதுமான பேருந்துகள் இயக்கப்படவில்லை என பயணிகள் குற்றம்சாட்டினர்

Advertisement