நாளை வாக்குச் சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம்

182
voter-id

சென்னையில் 3 ஆயிரத்து 754 வாக்குச் சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் நாளை நடைபெறுகிறது.

தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 1-ந்தேதி வெளியிடப்பட்டது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ள செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதம் வரை காலஅவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான சிறப்பு முகாம் நாளை மற்றும் 23-ந்தேதி, அடுத்த மாதம் 7 மற்றும் 14-ந்தேதி ஆகிய நாட்களில் நடைபெற உள்ளது. சென்னையில் 3 ஆயிரத்து 754 வாக்குச் சாவடி மையங்களில் சிறப்பு முகாம் நாளை நடைபெறுகிறது. காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை பொதுமக்கள் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் இடம் பெற்றுள்ளதா என பார்த்து அறிந்து கொள்ளலாம்.

18 வயது நிரம்பிய வாக்காளர்கள், பெயர் இல்லாதவர்கள் படிவம் 6-ஐ பெற்று பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். பெயர்களை நீக்கம் செய்ய படிவம் 7-ஐயும், முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தம் செய்ய படிவம் 8-ஐயும் பூர்த்தி செய்ய வேண்டும்.

ஒரே தொகுதிக்குள் இடம் மாறி இருந்தால் படிவம் ‘8ஏ’ வை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். மாநகராட்சி மண்டல அலுவலகங்களுக்கு சென்று விண்ணப்பம் பெற்று பூர்த்தி செய்து கொடுக்கலாம்.

ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். மேலும், “நே‌ஷனல் ஓட்டர்ஸ் போர்ட்டல்” வழியாகவும் tn.election.gov.in என்ற இணையதளம் வழியாகவும் விண்ணப்பிக்கலாம். 2 மாத பெயர் சேர்த்தல், நீக்கம் முகாம் நடந்து முடிந்த பிறகு விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு ஜனவரி முதல் வாரம் இறுதியில் வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here