8ம் வகுப்பு பொதுத்தேர்வு பள்ளியில் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்

294

8-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, பள்ளி நேரத்திலேயே ஒரு மணி நேரம் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் என்று, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ -மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் செங்கோட்டையன், மாவட்ட ஆட்சியர் கதிரவன் ஆகியோர் மிதிவண்டிகளை வழங்கினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பது குறித்து ஆய்வு பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

மத்திய அரசின் கட்டாய கல்வி திட்டம் மூலம், சுமார் 4 லட்சத்து 87 ஆயிரம் மாணவர்கள் தனியார் பள்ளிகளில் சேர்ந்துள்ளது குறித்த கேள்விக்கு பதிலளித்த செங்கோட்டையன், வரும் கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் கூடுதலாக 2 லட்சம் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள் என்று கூறினார்.

8-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, பள்ளி நேரத்திலேயே ஒரு மணி நேரம் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.