மதுரை – கொரோனா வைரஸ் பாதிப்புக்கு தனி வார்டு | Rajaji Hospital

90

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்ற போதிலும், மாநில சுகாதாரத்துறையின் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

சீனாவில் இருந்து கோவை வந்த அந்த நாட்டைச் சேர்ந்த 8 பேரை சுகாதாரத்துறை கண்காணித்து வருகிறது. இதனிடையே கொரோனா வைரஸ் பாதிப்புக்கு தனி சிறப்பு வார்டுகளை அமைக்குமாறு சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் உத்தரவிட்டிருந்தார்.

அதன்படி, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. 8 படுக்கைகள் போடப்பட்டுள்ளது. இந்த வார்டில் சிகிச்சை அளிக்க 2 நுரையீரல் சிகிச்சை பிரிவு மருத்துவர்கள், 2 பட்ட மேற்படிப்பு மருத்துவ மாணவர்கள், பொது மருத்துவர்கள், செவிலியர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்த அறிகுறிகளான மூக்கில் நீர் வடிதல், தலைவலி, தும்மல், இருமல், தொண்டையில் வறட்சி, காய்ச்சல் போன்றவை இருந்தால் அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க மதுரை அரசு மருத்துவமனை ஏற்பாடு செய்துள்ளது

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of