ஜெட் ஏர்வேஸ்க்கு கைகொடுத்த ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் ?

428

கடுமையான நிதி நெருக்கடி மற்றும் கடன் சுமையால் முற்றிலுமாக முடங்கிப்போன ஜெட் ஏர்வேஸ் விமானச்சேவை நிறுவனத்தை சேர்ந்த விமானிகள், பொறியாளர்கள், பணிப்பெண்கள் என சுமார் 2 ஆயிரம் பேர் வேலைவாய்ப்பை இழந்ததால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிப் போனது.

இந்நிலையில், தற்போது ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் மார்க்கெட்டை பிடிக்க ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. வெளிநாடுகளில் இருந்து பல விமானங்களை வாடகைக்கு பெறவும், சில புது விமானங்களை வாங்கவும் அந்நிறுவனம் தீர்மானித்துள்ளது.

மேலும் இந்த விமானங்களில் பணியாற்ற ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் முன்னாள் பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்க ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் முடிவுசெய்து, அதன் அடிப்படையில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் முன்னர் பணியாற்றிய 100 விமானிகள் உள்பட 500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் தலைவர் அஜய் சிங் இன்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of