ஸ்பைடர் மேன், அயர்ன் மேனை உருவாக்கிய மார்வல் காமிக்ஸ் நாயகன் ஸ்டான் லீ காலமானார்!

142
stanlee-dead

காமிக்ஸ் உலகின் நாயகன் ஸ்டான் லீ அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸில் நேற்று நள்ளிரவு 11.45 மணிக்கு தனது 95 வயதில் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.

ஸ்பைடர் மேன், அயர்ன் மேன், எக்ஸ் மேன், கேப்டன் அமெரிக்கா, ஹல்க், பிளாக் பந்தர், டெட்பூல், அவெஞ்சர்ஸ் உள்ளிட்ட முக்கியமான் சூப்பர் ஹீரோக்களை உருவாக்கியவர் ஸ்டான் லீ.

இவரது காமிக் புத்தகங்களை கோடிக்கணக்கில் விற்பனையாகின மேலும் இவர் ஹாலிவுட்டிலும் பெரிய அளவில் தடம் பதித்தார். ஸ்பைடர் மேன் டிரையாலஜி, அயர்ன் மேன் டிரையாலஜி, அவென்ஜர்ஸ் பாகங்கள், பென்டாஸ்டிக் 4, எக்ஸ் மேன் பாகங்கள், டெட்பூல் 1 /2 என்று இதுவரை தோல்வியே சந்திக்காமல் பல வித
வெற்றிகளை கண்டவர் ஸ்டான் லீ.

இவரது இயர்பெயர் ஸ்டான்லி மார்ட்டின் லீபர் என்பதும், மேலும் இவர் 1922 டிசம்பர் 28ல் பிறந்து 95 வருட நிறைவான வாழ்க்கையை வாழ்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் உருவாக்கிய படங்கள் இதோ…

stanlee-movies

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here