தமிழிசையின் புகழை பரப்ப வேண்டும்! தரமணியில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் அறிவுறுத்தல்!

460

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் தமிழிசை பரவலும் பங்களிப்பும் எனும் தலைப்பில் தேசியக் கருத்தரங்கம் சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கருத்தரங்கில் பேராசிரியர் இறையரசன் பேசுகையில்,

“ராஜராஜ சோழன் வென்ற கிழக்காசிய நாடுகள் முழுவதிலும் தமிழரின் இசை, சிற்பங்கள் , ஓவியங்கள் காணப்படுகின்றன. கம்போடியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் கண்ணகி, மணிமேகலை வழிபாடு காணப்படுகின்றது.

தாய்லாந்தின் அரசு விழாக்களில் தேவாரம் பண்ணிசை ஓதப்படுகிறது.”

என்றார்.

கருத்தரங்க ஒருங்கிணைப்பாளரும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் அயல்நாட்டு தமிழர் புலத்தின் பேராசிரியருமான கு. சிதம்பரம் பேசுகையில்,

“பல்வேறு கால கட்டங்களில் தமிழ் மொழி எவ்வாறு பிற மொழிகளின் தாக்கத்திற்கு ஆட்பட்டதோ அதேபோல தமிழிசையும் பிறமொழிகளின் தாக்கத்திற்கு ஆட்பட்டுள்ளது.

இந்நிலையிலிருந்து தமிழிசையினை மீட்டுருவாக்கம் செய்யவும் தமிழிசையின் மேன்மையினை உலகெங்கும் பரப்பவும் வழிவகை செய்யப்படும்.”

என்றார்.