ஹன்சிகா மோத்வானிக்கு வில்லனாகும் ஸ்ரீசாந்த் | Hansika Motwani

722

கடந்த சில காலங்களாக தமிழ் திரையுலகில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் படங்களையே நடிகைகள் விரும்புகின்றனர். நயன்தாரா ஏற்கனவே தன்னை முதன்மைப்படுத்தும் படங்களில் நடித்துவருகிறார். அந்த படங்கள் வெற்றிகரமாக ஓடி வசூல் சாதனையும் படைக்கிறது. தமன்னா தற்போது லீட் ரோலில் பெட்ரோமாக்ஸ் என்ற படத்தில் நடித்துள்ளார்.

இவர்கள் வரிசையில் ஹன்சிகாவும் தன்னை முன்னிலைப்படுத்தும் படத்தில் நடிக்க கதை கேட்டு வந்தார்.
இப்போது அப்படி ஒரு கதையை தேர்வு செய்து நடிக்கிறார். இது ஒரு திகில் படமாக தயாராகிறது. ஏற்கனவே சுந்தர்.சி இயக்கிய அரண்மனை படத்தில் பேயாக ஹன்சிகா நடித்துள்ளார். புதிய படத்தை ஹரி அண்ட் ஹரிஷ் இயக்குகின்றனர்.

இந்த படத்தில் ஹன்சிகாவுடன் பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement