டாஸ் வென்ற சன்ரைசர்ஸ்.., பேட்டிங்கில் நிதானத்தை காட்டும் மும்பை

359

அனல் பறக்கும் ஐபிஎல் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணியும், மும்பை அணியும் ஐதராபாத்தில் இன்று மோதுகின்றனர்.

இந்நிலையில் இதற்கான டாஸ் சுண்டப்பட்டது, இதில் முதலில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்து வருகின்றது. இவர்கள் ஆரம்பம் முதலே விக்கெட்டை இழக்க தொடங்கினர்.

மும்பை அணி 6 ஓவர் முடிவிற்கு இரண்டு விக்கெட்டு இழந்து 30 ரன்களுடன் விளையாடி வருகின்றனர்.

ஐதராபாத் அணி இதுவரை 4 ஆட்டத்தில் ஆடி 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது. மும்பை அணி 4 ஆட்டத்தில் விளையாடி 2 வெற்றி, 2 தோல்வியை சந்தித்துள்ளது.

ரன் குவிப்பில் மிரட்டி வரும் ஐதராபாத் அணி உள்ளூரிலும் வெற்றிப்பயணத்தை நீட்டிக்கும் முனைப்புடன் ஆயத்தமாக உள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of