டாஸ் வென்ற ஐதராபாத்.., பேட்டிங்கில் தடுமாறும் டெல்லி அணி

377

அனல் பறக்கும் ஐபிஎல் தொடரின் 16-வது லீக் போட்டியில் டெல்லி அணியும், சன்ரைசர்ஸ் அணியும் டெல்லி பேரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் பல பரிட்சை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் புவனேஸ்வர் குமார் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

பின்பு களமிறங்கும் டெல்லி அணியின் தொடக்க வீரர்களான பிரித்வி ஷா, தவான் இவர்களை ஆரம்பம் முதலே தங்களின் அதிரடி பந்து வீச்சின் மூலம் பயமுருத்த தொடங்கினர்.

இதில் புவனேஸ்வர் குமாரின் பந்து வீச்சில் சிக்கிய பிரித்வி ஷா11 ரன்னில் தனது விக்கெட்டு இழந்தார். பின்பு களமிறங்கிய ஷ்ரேயாஸ் அய்யர் ஆரம்பமுதலே நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இருப்பினும் ஐதராபாத் அணியின் பந்து வீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் தவானும் 12 ரன்களில் நடையைக்கட்டினார். இவரைத்தொடர்ந்து ரிஷப் பந்த் களமிறங்கினார். இவராவது ஐதராபாத் அணியின் பந்து வீச்சை சமாளித்து அணிக்கு தேவையான ரன்களை குவிப்பாரா என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.

டெல்லி அணி எட்டு ஓவர் முடிவிற்கு இரண்டு விக்கெட் இழப்பிற்கு 48 ரன்களுடன் களத்தில் விளையாடி வருகின்றனர்.

Advertisement