அடுத்த ஜனாதிபதி யார்? – தேர்தல் தேதி அறிவிப்பு.. பரபரப்பில் இலங்கை அரசியல்..!

161

எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் தேதி இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலையடுத்து அங்கு பல்வேறு குழப்பங்கள் நீடித்துவருகிறது. அரசு சரியான முறையில் இயங்கவில்லை என ஒருபுறம் குற்றச்சாட்டுகள் எழுந்த்துவருகிறது.

இதே போன்று இராணுவ ஆட்சியை கொண்டுவருவதற்கான முயற்சிகளும் நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பரபரப்பான சூழலில் முன்கூட்டியே தேர்தலை நடத்த இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு முடிவு செய்திருக்கிறது.

இந்த ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் அக்டோபர் 07ஆம் தேதி முதல் தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of