சீனாவிடம் இருந்து 100 கோடி அமெரிக்க டாலர்களை கடனாக பெறவுள்ளது இலங்கை!

424

இலங்கையின் கண்டி நகரை கொழும்புவுடன் இணைக்கும் நெடுஞ்சாலை பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நெடுஞ்சாலைகள் அமைக்கும் பணிகளில் ஏற்பட்டுள்ள முடக்கநிலையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் சீனாவிடம் இருந்து 100 கோடி அமெரிக்க டாலர்களை இலங்கை கடனாக பெறுகிறது என சீனாவுக்கான இலங்கை தூதர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, சீனாவுக்கான இலங்கை தூதர் கருணசேனா கொடிட்டுவாக்கு கூறியதாவது:

நெடுஞ்சாலைகள் அமைக்கும் பணிகளில் ஏற்பட்டுள்ள முடக்கநிலையை முடிவுக்கு கொண்டு வரும் நிலையில் முதல் கட்டமாக சீனாவிடம் இருந்து 100 கோடி அமெரிக்க டாலர்களை இலங்கை கடனாக பெறவுள்ளது என தெரிவித்துள்ளார்.