நாட்டில் நல்லிணக்கம் குறித்து பேசுவதில் பயன் இல்லை – இலங்கை எம்.பி. ஸ்ரீதரன்

453
srilanka

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யாமல் நாட்டில் நல்லிணக்கம் குறித்து பேசுவதில் பயன் இல்லை என்று இலங்கை எம்.பி. ஸ்ரீதரன் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் பேசிய அவர், இலங்கை சிறைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யாமல், நாட்டில் நல்லிணக்கம் ஒருமைப்பாடு குறித்து பேசுவதில் பயன் இல்லை என்றும், தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் தெரிவித்தார்.

இதனிடையே அனுராதபுரம் சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் நேற்று 6வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் உடல்நிலை பாதிக்கப்பட்ட ஒருவர் சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.