மீனவர்கள் கைது, வலைகளையும் கிழித்து இலங்கை கடற்படை அட்டூழியம்

204

நெடுஞ்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 4 பேர் இலங்கை கடற்படையால் சிறைப்பிடிக்கப்பட்டனர். இதற்கு தமிழக மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

எல்லைப்பகுதிகளில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களை கைது செய்வதை இலங்கை கடற்படை வாடிக்கையாக கொண்டுள்ளது. மீனவர்கள் கைது செய்வது மட்டுமில்லாமல், மீன்களையும், வலைகளையும் கிழித்து அட்டூழிய செயலில் ஈடுபடுவது சமீப காலத்தில் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் நெடுஞ்தீவு அருகே எல்லைப்பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டிணம் மீனவர்கள் 4 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர். இலங்கை கடற்படையின் தொடர் அட்டூழியத்திற்கு தமிழக மீனவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

 

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of