இலங்கை நாடாளுமன்றத்தை அந்நாட்டு அதிபர் சிறிசேனா அதிரடியாக கலைத்து உத்தரவு.

555

இலங்கையில் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவின் பதவி பறிக்கப்பட்டு, புதிய பிரதமராக ராஜபக்சே நியமிக்கப்பட்டார். இதைதொடர்ந்து ராஜபக்சே மற்றும் அமைச்சர்கள் முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்கட்சிகள் ராஜபக்சே பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என வலியுறுத்தின.

இதைதொடர்ந்து சர்வதேச அழுத்தங்கள் காரணமாக முடக்கப்பட்ட இலங்கை நாடாளுமன்றம் வரும் 14ஆம் தேதி கூடும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இலங்கை நாடாளுமன்றத்தை அந்நாட்டு அதிபர் சிறிசேனா கலைத்துள்ளார். இதற்கான அரசாணையில் நேற்றிரவு கையெழுத்திட்ட அவர், நள்ளிரவு முதல் நாடாளுமன்ற கலைப்பு அமலுக்கு வந்ததாகவும் அறிவித்தார். இதனால் இலங்கையில் அடுத்து என்ன நடக்க போகிறது என்பது தெரியாமல் அரசியல் கட்சிகள் குழப்பத்தில் உள்ளன

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of