இலங்கை நாடாளுமன்றத்திற்கு ஜனவரி 5 ஆம் தேதி தேர்தல் என அறிவிப்பு

234

இரண்டு பிரதமர்கள், இரண்டு சபாநாயர்கள் என இலங்கை அரசியலில் பெரும் குழப்பம் நிலவி வந்த நிலையில், அந்நாட்டு நாடாளுமன்றம் நேற்றிரவு கலைக்கப்பட்டது. இதைதொடர்ந்து 225 உறுப்பினர்களை கொண்ட இலங்கை நாடாளுமன்றத்துக்கு வரும் ஜனவரி 5-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நடவடிக்கைகள் முடிந்து ஜனவரி 17ஆம் தேதி புதிய நாடாளுமன்றம் பதவியேற்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு, தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இலங்கையில் ஏற்பட்டுள்ள உள்நாட்டு அரசியல் குழப்பம் உலக நாடுகளை உற்றுநோக்க வைத்துள்ளது.