இனப் படுகொலைகளால் பாதிக்கப்பட்டிருக்கும் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் – கமல்ஹாசன்

225

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவில் இனப் படுகொலைகளால் பாதிக்கப்பட்டிருக்கும் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சித்  தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பான அவரது டுவிட்டர் பதிவில்,  இலங்கையின் தமிழர்களும் இஸ்லாமியர்களும் ஏன் இந்த மசோதாவில் சேர்க்கப்படாமல் நீக்கப்பட்டுள்ளனர் என்று அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

இது வாக்கு வங்கிக்காக கொண்டு வரப்பட்ட மசோதா அல்ல என்றால், இலங்கைத் தமிழர்களும் இஸ்லாமியர்களும் இணைக்கப்படாதது ஏன் என்று கமல்ஹாசன் கேள்வி எழுப்பி உள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of