வசமாக சிக்கிய ஸ்ரீ-ரெட்டி! அப்போ எல்லாம் பொய்யா?

849

ஸ்ரீ-ரெட்டி ரெட்டி டைரி படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தின் பைனான்சியர் சுப்பிரமணி நள்ளிரவில் வீடு புகுந்து தாக்கியதாக ஸ்ரீ-ரெட்டி கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இது தொடர்பாக போலீசார் ஸ்ரீ-ரெட்டியை விசாரணைக்கு வருமாறு அழைத்திருந்தனர். சுப்பிரமணி விவகாரம் தொடர்பாக ஸ்ரீ-ரெட்டி மதுரவாயல் உதவி ஆணையர் அலுவலகத்திற்கு சென்றார்.

அப்போது அங்கு நடத்தப்பட்ட விசாரணையில், ஸ்ரீரெட்டி தான் சுப்பிரமணியை அவரது வீட்டிற்கு அழைத்து மது அருந்த வைத்துள்ளார் என்றும், சுப்பிரமணிக்கு மது கொடுத்துவிட்டு ஸ்ரீ-ரெட்டி ஜூஸ் குடித்துள்ளார் என்றும் தெரிய வந்துள்ளது.

மேலும், ஸ்ரீ-ரெட்டி நாடகமாடி தங்களின் நேரத்தை வீணடித்ததை உணர்ந்த போலீசார் அவரை எச்சரித்துள்ளனர். சுப்பிரமணியுடன் சமாதானமாக செல்வதாக ஸ்ரீ-ரெட்டி தெரிவித்துள்ளார்.