தமிழக அரசியலில் குதிக்கும் ஸ்ரீ-ரெட்டி..! எந்த கட்சியில் சேரப்போகிறார்..?

934

இயக்குநர்கள், நடிகர்கள் மீது பாலியல் புகாரைக் கூறி பெரும் பரபரப்பை கிளப்பியவர் நடிகை ஸ்ரீ-ரெட்டி. இதற்காக அரை நிர்வாண போராட்டத்திலும் இவர் ஈடுபட்டார். பல்வேறு சர்ச்சைகளில் அடிக்கடி சிக்கிக்கொள்ளும் இவர், அவரது சமூக வலைதள பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதையும் வழக்கமாக வைத்திருப்பவர்.

இந்நிலையில் இவரது டுவிட்டர் பக்கத்தில், தயாரிப்பாளரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் மீது, சர்ச்சை கருத்து ஒன்றை பதிவிட்டிருந்ததாக கூறப்பட்டது. இந்த டுவீட் பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், தற்போது இதுகுறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார்.

செய்தியாளர்களை சந்தித்த அவர், உதயநிதியை நான் நேரில் கூட பார்த்தது கிடையாது என்றும், உதயநிதியை பற்றி தவறுதலாக போடப்பட்ட பதிவு எனது ட்விட்டர் கணக்கு இல்லை என்றும் தெரிவித்தார்.

மேலும், உதயநிதியின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவே இந்த முயற்சி நடத்திருப்பதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்னையும் வாழ வைக்கும் என நம்புகிறேன். மிக விரைவில் அரசியலுக்கு வருகிறேன். தமிழகத்திற்கு சேவை செய்ய காத்திருக்கிறேன் என்று தெரிவித்தார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of