முதல்வருக்கு நன்றி சொன்ன ஸ்ரீ-ரெட்டி! காரணம் தெரியுமா?

689

படவாய்ப்பு தருவதாக தன்னை பாலியல் ரீதியாக தவறாக பயன்படுத்திக் கொண்டதாக தமிழ் மற்றும் தெலுங்கில் பல முன்னணி நட்சத்திரங்கள் மீது புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீரெட்டி.

கடந்தாண்டு ஏப்ரல் மாதம் அதிரடியாக அரை நிர்வாணப் போராட்டம் நடத்தியவர், தொடர்ந்து பேஸ்புக் வாயிலாக பல முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் மீது பாலியல் புகார் தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் தெலுங்கு நடிகைகளுக்கு எதிரான பாலியல் பிரச்சினைகள் தொடர்பாக விசாரிக்க, தெலுங்கானாவில் ராமமோகன் ராவ் தலைமையில் 25 பேர் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவில் நடிகை சுப்ரியா, நிகழ்ச்சி தொகுப்பாளர் ஜான்சி, இயக்குநர் நந்தினி ரெட்டி, பேராசிரியை வசந்தி, மருத்துவர் ராம தேவி, சமூக ஆர்வலர் விஜயலட்சுமி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இதனால் மற்ற தெலுங்கு நடிகைகளைப் போலவே ஸ்ரீரெட்டியும் மகிழ்ச்சி அடைந்துள்ளார். இது தொடர்பாக தனது பேஸ்புக் பக்கத்தில் அவர் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

அதில் அவர்,

“ஹைதராபாத்தை சேர்ந்தவளாகிய எனக்கு இன்று பெருமையாக இருக்கிறது. அரசுக்கு நன்றி, என்னுடைய கனவுகள் இன்று நிஜமாகிவிட்டது.

திரையில் ஹீரோக்களாக தோன்றுபவர்கள் நிஜத்தில் அப்படி இல்லை. ஆனால், முதல்வர் கே.சந்திரசேகர ராவ் ஒரு ரியல் ஹீரோ என நிரூபித்துவிட்டார்.

ஒரு வருடமாக நான் சுமந்த வலி இன்று பிரசவமாகியுள்ளது. ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி”

என அப்பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of