ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவுக்கு புவிசார் குறியீடு

272

ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவுக்கு புவிசார் குறியீடு கோரி அதனை வழங்கும் பதிவு அலுவலகத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் பால் உற்பத்தியாளர்கள் சங்கம் விண்ணப்பித்திருந்தது.

இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவுக்கு இன்று (செப்.10) புவிசார் குறியீடு வழங்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பால்கோவா தயாரிக்கப்படுகிறது.

தனியார் பால் பொருட்கள் நிறுவனங்கள் இதனைத் தயாரிக்கின்றன. இந்த பால்கோவா இணையம் மூலமாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இதன் தனித்துவம் என்னவென்றால் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதனைச் சுற்றி வளர்க்கப்படும் பசுக்களிலிருந்து கறக்கப்படும் பசும்பால் மூலமாக மட்டுமே இது செய்யப்படுகிறது.இந்தப் பால் அதிகாலையிலேயே பால் விற்பனையாளர்கள் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக பெறப்படுகிறது.

இந்தப் பால் இயற்கையாகவே இனிப்புச் சுவையுடன் இருப்பதால் பால்கோவா செய்வதற்கு சிறிதளவு சர்க்கரையே சேர்க்கப்படுகிறது. இந்த பால்கோவா 7-10 நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of