நடிகை ஸ்ரீதேவிக்கு மெழுகு சிலை… உருகிய கணவர் போனி கபூர்…!

585

நடிகை ஸ்ரீதேவியின் மெழுகு சிலையை மேடம் துசாட்ஸின் மெழுகு அருங்காட்சியகத்தில் நிறுவ போவதாக மேடம் துசாட்ஸ் சிங்கப்பூர் அறிவித்துள்ளது.

பாலிவுட்டின் ஐகான் ஆன ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இம்மாதம் இந்த மெழுகு சிலை அருங்காட்சியகத்தில் நிறுவப்படும் அன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் உள்ள மேடம் துசாட்ஸ் சிங்கப்பூர் ஒரு மெழுகு அருங்காட்சியகம் மற்றும் சுற்றுலா தலமாகும். இந்த அருங்காட்சியகம் சென்டோசா தீவின் இம்பியா லுக் அவுட்டில் அமைக்கப்பட்டுள்ளது.

இங்கு மிகவும் பிரபலமான குறிப்பிட்ட விளையாட்டு சின்னங்கள், அரசியல் சின்னங்கள், சூப்பர்ஸ்டார்கள் போன்றவர்களின் மெழுகு உருவங்கள் உள்ளன.

நெல்சன் மண்டேலா, மகாத்மா காந்தி, குயின் எலிசபெத் 2, பாராக் ஒபாமா, சச்சின் டெண்டுல்கர், ஜாக்கி சான், அமிதாப் பச்சன், கஜோல், ஷாருக் கான், ஐஸ்வர்யா ராய், மைகேல் ஜாக்சன், ஸ்பைடர் மேன், ஐயன் மேன் போன்ற பலரது உருவங்கள் உள்ளன.

மேலும் நமது இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடியின் மெழுகு சிலையும் வைக்கப்பட்டுள்ளது.நிஜ உருவம் போலவே ஒரு சிலை வடிவம் இருந்தால் அது எப்படி இருக்கும் என்று யூகித்து பாருங்கள்.

அதுவும் நமக்கு மிகவும் பிடித்தவர்கள், மனத்தில் நிலைத்து நிற்பவர்கள் இவர்கள் நம் அருகில் இருப்பது போல இருந்தால். ஆம் அது நம் கனவுக் கன்னி, நடிகை ஸ்ரீதேவியின் உருவம் தான்.

நடிகை ஸ்ரீதேவியின் 56வது பிறந்தநாளான ஆகஸ்ட் 13ஆம் தேதி அன்று மேடம் துசாட்ஸ் சிங்கப்பூர் ஒரு அற்புதமான பரிசை அறிவித்துள்ளது. நடிகை ஸ்ரீதேவியின் மெழுகு உருவத்தை மேடம் துசாட்ஸின் மெழுகு அருங்காட்சியகத்தில் நிறுவ போவதாக அறிவித்துள்ளது. பாலிவுட்டின் ஐகான் ஆன ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் செப்டம்பர் மாதம் இந்த மெழுகு சிலை அருங்காட்சியகத்தில் நிறுவப்படும் அன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு நடிகை ஸ்ரீதேவியின் கணவரும், தயாரிப்பாளருமான போனி கபூர் நன்றி தெரிவித்துள்ளார் . ஸ்ரீதேவியின் மறைவுக்கு பிறகும் அவருக்கு கிடைக்கும் இந்த மரியாதையை நினைத்து நான் மிகவும் மனமகிழ்ந்து உள்ளேன். மேடம் துசாட்ஸ் சிங்கப்பூரில் நடைபெறும் அல்டிமேட் ஃபிலிம் ஸ்டார் எக்ஸ்பீரியன்ஸ் நிகழ்ச்சியில் நானும் எனது குடும்பமும் ஒரு பகுதியாக கலந்து கொள்வோம் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் போனி கபூர்.

80களில் பாலிவுட் மட்டுமின்றி அனைத்து இந்திய திரையுலகிலும் கொடிகட்டி பறந்த நடிகை ஸ்ரீதேவி கடந்த 2018ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதியன்று தற்செயலாக தண்ணீரில் மூழ்கி இறந்தார்.

அவரின் மறைவு அவர்கள் குடும்பத்தில் உள்ளவர்கள், ரசிகர்கள் மட்டுமின்றி இந்த இந்தியாவையே சோகத்தில் ஆழ்த்தியது. அந்த தேவதையின் அழகு சிலையை வரும் சந்ததியினரும் இந்த மெழுகு அருங்காட்சியகம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of